தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருநாவுக்கரசர்

 • நாட்டியக் கலைஞர் ஈ.கிருஷ்ண ஐயர்

  முனைவர் இரா.மாதவி
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  முன்னுரை

  ஈ.கிருஷ்ணய்யர் 9.8.1897இல் பிறந்தார். இவர் இளமையில் கல்வி கற்று, 1922-ல் தமது வக்கில் தொழிலைத் துவங்கினார். ஓய்வு நேரங்களில் பரதநாட்டியம் பயின்று அதில் நல்ல தேர்ச்சியும் பெற்றார். சென்னையில் கலாசேத்திரம் துவங்கவும், பரதநாட்டிய கலையை வளர்க்கவும் இவர் பல முயற்சிகளை எடுத்து, இசை, நாட்டியம் தொடர்பாக இவர் பல நூல்களை எழுதியுள்ளார். சென்னை நாடக சங்கத்தின் செயலாளராகப் பணி புரிந்தார். இவரும் சில நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு பரதநாட்டியம் ஆடி மக்களை மகிழ்வித்துள்ளார்.

  பரதகலையின் வளர்ச்சி

  இவற்றுள் பெண் வேடம் போட்டுக் கொண்டு ஆடும்பொழுது நாயகி பாவத்தினை பெண்களையே மிஞ்சக் கூடிய அளவில் மிகவும் சிறப்பாக ஆடிக் காட்டிப் பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் இத்தகைய பழம்பெரும் ஆடல் கலைஞர்கள் அற்புதச் செயல்பாடுகளால்தான் இன்று பரதநாட்டியக்கலை இந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது என்பதே உண்மை நிலையாகும்.

  பரதகலை பின்தங்கிய நிலை

  பரதகலையின் பிறப்பிடமான தமிழகத்திலேயே 1917-ம் ஆண்டு அக்கலை மிகவும் நலிவுறும் நிலையை அடைந்தது. தேவதாசிகளுக்கே உரியது என்று இருந்தபடியால் பெரும்பாலோர் இக்கலையைக் கற்கும் வாய்ப்பில்லை. குறிப்பாக முத்து லக்ஷ்மி ரெட்டி அம்மையார் சட்டசபையில் கோவில்களில் தேவதாசிகளைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்யவும், கோவில்களில் தேவதாசிகளைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்யவும், சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு இக்கலை மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

  கிருஷ்ண ஐயரின் விடுதலை வேட்டை

  வழக்கறிஞரும் சுதந்திரப்போராட்ட வீரருமான ஈ கிருஷ்ண ஐயர் நாட்டிய உலகில் அடியெடுத்து வைத்தார். மிகவும் வைதீக அந்தணர் குலத்தில் பிறந்த இவர் வக்கீல் பணியைத் தொழிலாகச் செய்து வந்தார். 1926-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வேள்வியில் குதித்த இவர் தென்னிந்தியா முழுவதும் சுற்றி தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களையும், தேசிய உணர்வூட்டும் மற்றைய பாடல்களையும் பாடி மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டி வந்தார். இயல்பிலேயே நல்ல குரல் வளமும், நாட்டிய ஆற்றலும் மிகுந்த கிருஷ்ண ஐயர் பெண் உடைகளை அணிந்து பெண் வேடமிட்டு அவ்வப்போது நடிப்பதும் வழக்கமாய் இருந்தது. குறிப்பாக, சென்னையிலுள்ள சுகுண விலாச சபா என்ற கலை நிறுவனம் நடத்தி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் ஏற்கனவே கர்நாடக இசையிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். 1925-ம் ஆண்டு பாகவதமேளா நாடகங்களை நடத்திவந்த மெலட்டூர் நடேசஐயர் என்பவரிடம் பரதநாட்டியப் பயிற்சிகளையும் கிருஷ்ண ஐயர் பெற்றார்.

  நடனத்திற்கு எதிரான பணிபோர்கள்

  பரதநாட்டிய மறுமலர்ச்சியில் ஒரு முக்கிய பங்கேற்பு கிருஷ்ண ஐயர் அவர்கள் அடிக்கடி பெண் உடையணிந்து பரதம் ஆடத் துவங்கினார். அந்தச் சமயத்தில் கிருஷ்ண ஐயரும் இயக்கத் தலைவர்களும் நடனத்திற்கு எதிராக நடந்த யுத்த பணிபோரில் முழுமூச்சுடன் ஈடுபட்டனர். இச்சமயத்தில் லண்டன் மாநகரிலிருந்து வந்திருந்த குமாரி டெனன்ட் என்பவர் பரதநாட்டியம் ஆடுவதற்கு எதிராக்க் கருத்துக்களை மக்களிடையே பரப்பினார். அவர் சமுதாயத்திலிருந்த முக்கிய பிரமுகர்களிடமிருந்து கையெழுத்து வேட்டை நடத்தி நடனமாடுவதைத் தடை செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இக்காரியத்தில் சமூக சீர்திருத்தவாதிகளின் பேராதரவையும் அவர் பெற்றார். 1927-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சென்னையில் நடைப்பெற்ற போது கிருஷ்ண ஐயர் அகில இந்திய இசை மாநாட்டை ஏற்பாடு செய்தார். இம்மாநாடு சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்த இசை மாநாட்டின் சிறிய கிளை போலச் சென்னையில் 1928-ல் இசை அகாடமி உருவானது. 10 ஆண்டு காலம் திரு.கிருஷ்ண ஐயர் அதன் செயலர்களுள் ஒருவராகப் பணியாற்றினார்.

  நடன எதிர்ப்பு

  1931-ல் நடன எதிர்ப்பு உச்ச நிலையை அடைந்தது. இச்சமயத்தில் திரு.கிருஷ்ணய்யர் அவர்களின் இசை அகாடமி அரங்கில் திருவில்லிபுத்தூர் கல்யாணி குமாரத்திகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றப் பரிந்துரை செய்தார். இது இவரது எதிரிகளின் கோபத்தை இன்னும் கிளறியது. ஆனால் ஐயர் அவர்கள் சிறிதும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இது நடனத்தை ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே ஒரு யுத்தத்தைத் தூண்டி விடக் காரணமாய் அமைத்தது.

  பரத வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சி

  1932-ம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாலைப் பொழுதில் சென்னையில் முதலமைச்சராக இருந்த கேபிலியன் மன்னரைக் கௌரவிக்க ஒரு தேவதாசியின் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி இந்த நடன நிகழ்ச்சியையும் அதை ஏற்பாடு செய்தவர்களையும் கண்டித்து பத்திரிக்கையில் எழுதினார். இவை காரசாரமான விவாதமாகி அந்நாளில் வெளிவந்த செய்திதாள்களில் பல நாட்கள் வெளிவந்தது. இவ்விஷயம் பரதநாட்டிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.பரதநாட்டிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது.

  திரு கிருஷ்ண ஐயர் பெங்களூர் நாகரெத்தினம்மையார், ருக்மணி தேவி போன்றோரின் விடா முயற்சியினால் தான் பரதகலை புத்துயிர் பெற்றது. திரு கிருஷ்ண ஐயர் பரதகலையின் மறுமலர்ச்சிக்கு ஆற்றியுள்ள அரும்பணிக்கு ஒரு சான்றாகும்.

  1933இல் கிருஷ்ண ஐயர் கல்யாணி குமாரத்திகளின் பரத நிகழ்வினை மீண்டும் ஒரு முறை சங்கீத வித்வ சபையில் அரங்கேற்றினார். பெரும் சர்ச்சசைக்குரிய இவ்விஷயம் இதுவரை சந்தித்திராத அளவு வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.

  சங்கீத வித்வ சபை

  இந்தக் கலையை ஏற்றுக் கொண்டு அளித்த அங்கிகாரம் இக்கலைக்கு ஒரு மரியாதைக்குரிய அந்தஸ்தும் பெற்றுத் தந்தது. இந்த அகாடமியின் வைபத்தில் முன்னிலையில் இருக்கும் நடன மணிகள் பங்கேற்று நடனமாடுவதை ஒரு கௌரவமாக கருதி போட்டியிடுமளவு நடனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.

  சமுதாயத்தில் அனைவரும் இக்கலையைக் கற்று உயர்ந்த நிலை அடைய காரணமாயிருந்தார். இன்று பரத கலைக்குத் தனிச் சிறப்பென்று கூறினால் அது கிருஷ்ணையரையே சாரும் என்பதில் ஐயமில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:15:35(இந்திய நேரம்)