தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

  • கங்காதரமூர்த்தி

    முனைவர் வே.லதா
    உதவிப்பேராசிரியர்
    சிற்பத்துறை

    புராணப் பின்னணி:

    சகரன் என்னும் மன்னன் அறுபதினாயிரம் மகன்களைப் பெற்றான். இவர்கள் கபிலரின் தவத்தைச் சிதைத்ததால் சாம்பலாகினர். சகரனின் சந்ததியான பகீரதன் தம் முன்னோர்களின் வீடுபேறு வேண்டி தவம் மேற்கொண்டார். அதன் பயனாக கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர கங்கையின் வேகம் பூவுலகத்தை அழித்து விடாமலிருக்கக் கங்கையினைச் சிவன் தம் சடைமுடியில் தாங்கினார். இதனால் இவர் கங்காதரர் ஆனதாகப் புராணங்கள் குறிப்பிடுகிறது.

    கங்கையை சடையில் தாங்கும் கங்காதரர்


    படிமக்கலை:

    கங்காதரமூர்த்தி நான்கு கரங்கள் (சதுர்புஜம்), நின்ற நிலையில் (ஸ்தானகநிலை) மூன்று பங்கங்களுடன் (திரிபங்க நிலையில்) முன் வலது கை அபயம் புரிவது போல கீழ்நோக்கியும் பின் வலது கை அக்கமாலை, பின் இடது கை சடாமுடியின் சடையை பிடித்தவாறும் அமைந்திருக்கும். கங்காதரரின் இடது புறம் கங்கை மண்டியிட்டு வணங்கிய நிலையில் சிவனின் சடை முடியை நோக்கி வருவது போல் அமைந்திருக்கும். கந்தஹாரம் வாஸ்த்ரா யக்ஞோபவீதம், கேயூரம், கங்கணம் அணிந்திருக்கும்.

    இலக்கியக் குறிப்புகள்:

    தேவாரம் - கங்கைப் புனலுடையான் கங்கையைப் பெற்றவன், கங்கையைக் கறந்தான், புனலுடையான், கங்கையை அங்கே வாழவைத்த கள்வன் என்று குறிப்பிடுகிறது.

    வரலாற்றுச் சிறப்பு:

    முற்காலப் பாண்டியர் கோயிலான திருக்கோகர்ணம் குடவரையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் மாமல்லபுரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் தஞ்சைப் பிரஹதீசுவரர் கோயிலில் இச்சிற்பம் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:01:34(இந்திய நேரம்)