தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ரதி

  • ரதி

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    தொன்ம பின்புலம் :

    இந்து மதத்தில் காணப்படும் குழுபடிமங்களில் காதல் கடவுள் அல்லது காமக்கடவுள் என்று கூறப்படும் மன்மதன் அல்லது காமதேவனின் மனைவிகளில் ஒருவராக ரதி கருதப்படுகிறாள். ரதி என்ற வடமொழிச் சொல் ரம் (ram) என்ற மூலச்சொல்லிலிருந்து உருவானதாகும்.

    இரதி

    இச்சொல் மகிழ்ச்சி அல்லது களிப்பு என்று பொருள் கொள்ளப்படுகிறது. ரதியின் தோற்றம் தொடர்பாகப் பாகவத புராணம், மட்சய புராணம், பிரும்மாண்ட புராணம், கந்த புராணம் ஆகிய புராணங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இப்புராணங்கள் ஒவ்வொன்றிலும் மாறுப்பட்ட கதை நிகழ்வுகளும் விளக்கப்பட்டுள்ளது. குமாரச் சம்பவம் எனப்படும் இலக்கியத்தில் குமரனின் பிறப்பிற்கு முன்னர் சிவன் யோக நிலையில் அமர்ந்திருந்தார் அந்நிலையில் அவரின் யோகத்தைக் கலைப்பதற்காகக் காமன் மலர் வீணையை வீசினார். சினம் கொண்ட சிவன் தமது நெற்றிக் கண்ணால் காமனை எரித்து சாம்பலாக்கினார். காமனின் மறைவிற்குப் பின்னர் அச்சாம்பலை உடல் மூழுவதும் பூசிக்கொண்டு ரதி கடும் தவம் புரிந்தாள். தவத்தின் பலனாகச் சிவன் மற்றும் பார்வதி வரத்தால் காமன் விஷ்ணுவின் தசவதாரத்தில் கிருஷ்ணனின் மகனாக பிரத்யுமன் என்ற பெயரில் புவியில் தோன்றி, மீண்டும் ரதியைனை மணந்தார். காளிக்கா புராணம், பிரஜாபதியான பிரம்மன் தனது மனதிலிருந்து காமனைத் தோற்றுவித்தான் காமனை அனைவரிடமும் சிற்றின்ப வேட்கையில் தூண்டிடப்பணிந்தான் அதன் விளைவாக காமன் மலர் கிணைகளை வீச அதனால் வேட்கை உணர்வினைப் பெற்று பிரஜாபதிகள் பிரம்மனின் மகளான சந்தியாவின் மீது மையலுற்றனர். இந்நிலையில் தக்சனின் வியர்வையிலிருந்து ரதி தோன்றினால் அந்த ரதியை மன்மதனுக்குப் பரிசாக அளித்தான். இவ்வாறாக ரதியின் தோற்றம் தொடர்பாக மாறுப்பட்ட கதைகள் இந்து புராணங்களில் காணக்கூடியதாக உள்ளது.

    ரதி படிமங்கள் என்ற நிலையில், ரதி பெரும்பாலும் காமனுடன் இணைந்தவாறே அழகிய தோற்றத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடன் கைகளில் வாளை ஏந்தி காண்போர் கவரும் வண்ணம் கிளியினை வாகனமாகக் கொண்டு இப்படிமம் அமைந்திடவேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:05:14(இந்திய நேரம்)