5. இக்கால இலக்கியம்

இன்பம்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


இற்றைநாள் திருவாரூர் மாவட்டம் பழையனூர் கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் சுரதா. இவர் பிறந்த நாள் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23. தந்தையார் திருவேங்கடம், தாயார் சண்பகம் அம்மாள். இவரது இயற்பெயர் இராசகோபால். இலக்கியம், காவியம், சுரதா ஆகிய இதழ்களை நடத்தினார். இவர் எழுதிய தேன்மழை என்கின்ற கவிதை நூல் பல பரிசுகளை வென்றது.

தம் 24 ஆம் வயதிலேயே திரைப்பட வசனகர்த்தாவாகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் விளங்கினார். இவர் பாரதிதாசன்மேல் கொண்ட பற்றின் காரணமாக சுப்புரத்தினதாசன் ஆகி, சுரதா எனப் பெயர் பெற்றார். இவரைத் தமிழுலகம் உவமைக் கவிஞர் என அழைக்கின்றது.