5. இக்கால இலக்கியம்

புதுக்கவிதை

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  மரபுக்கவிதையிலிருந்து மாறுபட்ட புதுவடிவம் கொண்டதை --------- என்கிறோம்.

மரபுக்கவிதையிலிருந்து மாறுபட்ட புதுவடிவம் கொண்டதை புதுக்கவிதை என்கிறோம்.

2.  புதுக்கவிதையை ----------- என்றும் கூறலாம்.

புதுக்கவிதையை உரைவீச்சு என்றும் கூறலாம்.

3.  வல்லிக்கண்ணன் பிறந்த ஊர் ---------- ஆகும்.

வல்லிக்கண்ணன் பிறந்த ஊர் இராசவல்லிபுரம் ஆகும்.

4.  வல்லிக்கண்ணன் எழுதிய ----------- என்ற நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.

வல்லிக்கண்ணன் எழுதிய புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.

5.  அமுதபாரதி ---------- பகுதியைச் சேர்ந்தவர்.

அமுதபாரதி திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்.

6.  அமுதபாரதியின் தாயார் பெயர் --------- ஆகும்.

அமுதபாரதியின் தாயார் பெயர் வள்ளியம்மாள் ஆகும்.

7.  அமுதபாரதி தமிழில் முதல் ---------- நூல் எழுதியவர்.

அமுதபாரதி தமிழில் முதல் ஐக்கூ நூல் எழுதியவர்.

8.  அமுதபாரதி தமிழ்நாடு அரசின் --------- விருது பெற்றவர்.

அமுதபாரதி தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்.

9.  கொடுத்தே தீரவேண்டியது --------- ஆகும்.

கொடுத்தே தீரவேண்டியது கடன் ஆகும்.

10.  இந்தக் காட்டில் எந்த ----------- புல்லாங்குழல்?

இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?