5. இக்கால இலக்கியம்

சுயமரியாதை உலகு

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  பாரதிதாசன் காலம் ------------- உச்சக்கட்டத்தில் இருந்த காலம்.

பாரதிதாசன் காலம் சமுதாயச் சீர்திருத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம்.

2.  பாரதிதாசனின் பாடுபொருள் சாதி, சமய, ---------- ஆகியவற்றை எதிர்ப்பதாகும்.

பாரதிதாசனின் பாடுபொருள் சாதி, சமய, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்ப்பதாகும்.

3.  பாரதிதாசன் ---------- ஆம் ஆண்டு பிறந்தார்.

பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.

4.  பாரதிதாசனின் இயற்பெயர் ----------- ஆகும்.

பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்.

5.  பாரதிதாசன் --------மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

பாரதிதாசன் பாரதியார் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

6.  பாரதிதாசன் ------- என்ற கவிதை ஏட்டை நடத்தினார்.

பாரதிதாசன் குயில் என்ற கவிதை ஏட்டை நடத்தினார்.

7.  பாரதிதாசன் -----------ஆகப் பணியாற்றினார்.

பாரதிதாசன் தமிழாசிரியர் ஆகப் பணியாற்றினார்.

8.  தமிழ்நாடு பாரதிதாசனைப் ----------- என்றும், புரட்சிக்கவிஞர் என்றும் கொண்டாடுகிறது.

தமிழ்நாடு பாரதிதாசனைப் பாவேந்தர் என்றும், புரட்சிக்கவிஞர் என்றும் கொண்டாடுகிறது.

9.  உலகம் சாதிமத ---------- தாங்கியுள்ளது.

உலகம் சாதிமத பேதங்கள் தாங்கியுள்ளது.

10.  பேதமிலா உலகத்துக்கு --------- எனப் பெயர் வைப்போம்.

பேதமிலா உலகத்துக்கு தன்மான உலகு எனப் பெயர் வைப்போம்.