முரசு
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. பாரதியார் எப்பொழுது பிறந்தார்?
பாரதியார் 1882ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11ஆம் நாள் பிறந்தார்.
2. பாரதியாரின் பெற்றோர் யாவர்?
பாரதியாரின் பெற்றோர் சின்னச்சாமி, இலக்குமி அம்மாள் ஆவர்.
3. பாரதியார் எவ்வாறு அழைக்கப்பெற்றார்?
பாரதியார் தேசிய கவி என அழைக்கப்பெற்றார்.
4. பாரதியார் பணியாற்றிய இதழ்கள் யாவை?
பாரதியார் பணியாற்றிய இதழ்கள் சுதேசமித்திரன், இந்தியா.
5. பெண்ணுக்கு இறைவன் எதைப் படைத்துள்ளான்?
பெண்ணுக்கு இறைவன் அறிவைப் படைத்துள்ளான்.
6. பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் எது அகன்றுவிடும்?
பெண்கள் அறிவை வளர்த்தால் உலகில் அறியாமை அகன்றுவிடும்.
7. சில மூடர்கள் யார் அறிவைக் கெடுக்கின்றனர்?
சில மூடர்கள் பெண்கள் அறிவைக் கெடுக்கின்றனர்.
8. பெண்ணுக்கு அறிவை வைத்தவர் யார்?
பெண்ணுக்கு அறிவை வைத்தவர் உலகை ஆளும் ஈசன்.
9. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் எது?
சுதேசமித்திரன்
10. பாரதியார் எப்பொழுது இயற்கை எய்தினார்?
11-9-1921இல்