5. இக்கால இலக்கியம்

சுயமரியாதை உலகு

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29 அன்று புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தார். தந்தை கனகசபை. தாயார் இலக்குமி. இவரது இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரிடம் கொண்ட ஈடுபாட்டால் இவர் தம்பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். இவர் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். குயில் என்ற கவிதை ஏட்டை நடத்தினார். பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு முதலிய பல பனுவல்களைப் படைத்துள்ளார். 1964 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 அன்று இயற்கை எய்தினார். தமிழ்உலகம் அவரைப் பாவேந்தர் என்றும், புரட்சிக் கவிஞர் என்றும் கொண்டாடுகிறது.