5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கிராமப்புறங்களில் வாழும் ----------- பாடிக்கொண்டே வேலை செய்வர்.

கிராமப்புறங்களில் வாழும் உழைப்பாளி மக்கள் பாடிக்கொண்டே வேலை செய்வர்.

2.  நாட்டுப்புறங்களில் பாடப் பெறும் பாடல்கள் ------- எனப் பெறுகின்றன.

நாட்டுப்புறங்களில் பாடப் பெறும் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள் எனப் பெறுகின்றன.

3.  செவிவழிவந்த இப்பாடல்களை ---------- என்பர்.

செவிவழிவந்த இப்பாடல்களை எழுதாக் கிளவி என்பர்.

4.  பாமர மக்கள் பாடும் பாடல்கள் ----------- எனப்பெறும்.

பாமர மக்கள் பாடும் பாடல்கள் பாமரர் பாடல்கள் எனப்பெறும்.

5.  நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்று -------------------- பாடப்பகுதியாக அமைந்துள்ளது.

நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்று தாலாட்டுப் பாடல் பாடப்பகுதியாக அமைந்துள்ளது.

6.  நாட்டுப்புறப் பாடல்கள் ---------- படிப்பறிவில்லாத பாமர மக்களால் பாடப் பெற்றவை.

நாட்டுப்புறப் பாடல்கள் தொன்றுதொட்டு படிப்பறிவில்லாத பாமர மக்களால் பாடப் பெற்றவை.

7.  வாங்கி வந்த --------- பெருமை பாடப்பெறுகிறது.

வாங்கி வந்த பால்பசு பெருமை பாடப்பெறுகிறது.

8.  பால்பசுவின் வாலும், கொம்பும் ---------- நிறமானவை.

பால்பசுவின் வாலும், கொம்பும் தங்க நிறமானவை.

9.  பால்பசுவின் அணைகயிறு ------------- செய்யப்பெற்றது.

பால்பசுவின் அணைகயிறு பொன்னால் செய்யப்பெற்றது.

10.  பால்பசுவின் ---------- பொன்னால் செய்யப்பெற்றது.

பால்பசுவின் பிடிகயிறு பொன்னால் செய்யப்பெற்றது.