இன்பம்
பாடல்
Poem
இன்பம்
கற்றவர் முன்தாம் கற்ற
கல்வியைக் கூறல் இன்பம்
வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
வினைபல புரிதல் இன்பம்
சிற்றினக் கயவ ரோடு
சேராது வாழ்தல் இன்பம்
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம் !
- சுரதா
