5. இக்கால இலக்கியம்

இன்பம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  இன்பமும் துன்பமும் கலந்ததே ---------- ஆகும்.

இன்பமும் துன்பமும் கலந்ததே மனித வாழ்க்கை ஆகும்.

2.  எல்லாரும் ---------- ஆக வாழவே விரும்புவர்.

எல்லாரும் இன்பம் ஆக வாழவே விரும்புவர்.

3.  திருவாரூர் மாவட்டம் ----------- சுரதா பிறந்த ஊர்.

திருவாரூர் மாவட்டம் பழையனூர் சுரதா பிறந்த ஊர்.

4.  சுரதாவின் தந்தையார் ----------- ஆவார்.

சுரதாவின் தந்தையார் திருவேங்கடம் ஆவார்.

5.  சுரதாவின் இயற்பெயர் ----------- என்பதாகும்.

சுரதாவின் இயற்பெயர் இராசகோபால் என்பதாகும்

6.  சுரதாவின் ----------- பல பரிசுகளை வென்றது.

சுரதாவின் தேன்மழை பல பரிசுகளை வென்றது.

7.  சுரதா என்ற பெயர் ---------- மேல் கொண்ட பற்றின் காரணமாக அமைந்தது.

சுரதா என்ற பெயர் பாரதிதாசன் மேல் கொண்ட பற்றின் காரணமாக அமைந்தது.

8.  தமிழுலகம் சுரதாவை ------------- என அழைக்கின்றது.

தமிழுலகம் சுரதாவை உவமைக் கவிஞர் என அழைக்கின்றது.

9.  வாழ்வில் ------------- தரும் செயல்களைச் செய்வது இன்பமாகும்.

வாழ்வில் வெற்றி தரும் செயல்களைச் செய்வது இன்பமாகும்.

10.  பெற்றதைப் பிறருக்கு வழங்கும் ---------- இன்பமாகும்.

பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருங்குணம் இன்பமாகும்.