முரசு
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

பாரதியார்
இப்பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் 1882ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். தந்தையார் சின்னச்சாமி; தாயார் இலக்குமியம்மாள்; துணைவியார் செல்லம்மாள். சுதேசமித்திரன், இந்தியா முதலிய பல இதழ்களில் ஆசிரியராகவும், துணையாசிரியராகவும் பணியாற்றியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவர் பங்குகொண்டதால் தேசிய கவி என அழைக்கப்பெற்றார். இவர் 11-9-1921 இல் இயற்கை எய்தினார்.