5. இக்கால இலக்கியம்

இன்பம்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  இன்பமும் துன்பமும் கலந்தது

அ) மனித வாழ்க்கை

ஆ) வானவர் வாழ்க்கை

இ) முனிவர் வாழ்க்கை

ஈ) விலங்கு வாழ்க்கை

அ) மனித வாழ்க்கை

2.  இன்பமாக வாழ விரும்புபவர்

அ) நல்லவர்

ஆ) எல்லாரும்

இ) தீயவர்

ஈ) சிலர்

ஆ) எல்லாரும்

3.  சுரதா எழுதியப் பாடல் பகுதியின் தலைப்பு

அ) துன்பம்

ஆ) துயரம்

இ) இன்பம்

ஈ) இனிமை

இ) இன்பம்

4.  சுரதா பிறந்த ஊர்

அ) பழையனூர்

ஆ) புதூர்

இ) புத்தூர்

ஈ) மோகனூர்

அ) பழையனூர்

5.  சுரதா பிறந்த ஆண்டு

அ) 1931

ஆ) 1921

இ) 1941

ஈ) 1927

ஆ) 1921

6.  சுரதாவின் தாயார் பெயர்

அ) சண்பகம் அம்மாள்

ஆ) சந்திரா அம்மாள்

இ) சாரதா அம்மாள்

ஈ) சித்திரா அம்மாள்

அ) சண்பகம் அம்மாள்

7.  பல பரிசுகளை வென்ற சுரதாவின் நூலின் பெயர்

அ) பாமழை

ஆ) காவியம்

இ) இலக்கியம்

ஈ) தேன்மழை

ஈ) தேன்மழை

8.  தமிழுலகம் சுரதாவை எவ்வாறு அழைக்கின்றது?

அ) மகாகவி

ஆ) பாவேந்தர்

இ) உவமைக்கவிஞர்

ஈ) கவிமணி

இ) உவமைக் கவிஞர்

9.  தாம் கற்ற கல்வியை யாரிடம் கூறுவது இன்பமானது என்கின்றார் சுரதா?

அ) கற்றவர்

ஆ) அறிஞர்

இ) கல்லாதவர்

ஈ) புலவர்

அ) கற்றவர்

10.  வாழ்வில் எதனைச் சேர்ப்பது இன்பமாகும்?

அ) புகழ்

ஆ) அறிவு

இ) செல்வம்

ஈ) வெற்றி

ஈ) வெற்றி