5. இக்கால இலக்கியம்

சுயமரியாதை உலகு

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  பாரதிதாசன் பிறந்த இடம்

அ) சென்னை

ஆ) கடலூர்

இ) புதுச்சேரி

ஈ) கோவா

இ) புதுச்சேரி

2.  பாரதிதாசன் பிறந்த நாள்

அ) ஏப்பிரல் 29

ஆ) ஏப்பிரல் 21

இ) செப்டம்பர் 15

ஈ) செப்டம்பர் 17

அ) ஏப்பிரல் 29

3.  பாரதிதாசனின் தந்தையார் பெயர்

அ) சிற்சபை

ஆ) கனகசபை

இ) சபாபதி

ஈ) சுப்புரத்தினம்

ஆ) கனகசபை

4.  பாரதிதாசனின் இயற்பெயர்

அ) சுப்பிரமணி

ஆ) சுந்தரமணி

இ) சுப்புரத்தினம்

ஈ) சுப்பையா

இ) சுப்புரத்தினம்

5.  பாரதிதாசன் நடத்தியக் கவிதை ஏடு

அ) குயில்

ஆ) மயில்

இ) புறா

ஈ) கிள்ளை

அ) குயில்

6.  பாரதிதாசன் இயற்றியக் குறுங்காவியம் ஒன்றனைக் கூறுக.

அ) குடும்ப விளக்கு

ஆ) பாண்டியன் பரிசு

இ) தமிழியக்கம்

ஈ) இருண்ட வீடு

ஆ) பாண்டியன் பரிசு

7.  பாரதிதாசன் மறைந்த ஆண்டு

அ) 1964

ஆ) 1974

இ) 1965

ஈ) 1963

அ) 1964

8.  தமிழ் உலகம் பாரதிதாசனை எவ்வாறு கொண்டாடுகிறது?

அ) மகாகவி

ஆ) பெரும்புலவர்

இ) பாவேந்தர்

ஈ) தேசிய கவி

இ) பாவேந்தர்

9.  உலகில் உள்ள பேதங்கள்

அ) அறியாமை

ஆ) மூடநம்பிக்கை

இ) சாதிமத பேதம்

ஈ) சண்டைச் சச்சரவு

இ) சாதிமத பேதம்

10.  அறிவு உலகத்தின் பெயர்

அ) தன்மான உலகு

ஆ) அறிவியல் உலகு

இ) கணினி உலகு

ஈ) பகுத்தறிவு உலகு

அ) தன்மான உலகு