சுயமரியாதை உலகு
பாடல்
Poem
சுயமரியாதை உலகு
சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம் பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்
பேசுசுய மரியாதை உலகுஎனப்பேர் வைப்போம்
ஈதே காண்! சமூகமே! யாம்சொன்ன வழியில்
ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.
- பாரதிதாசன்
