5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  சிற்றூர்களில் வாழும் மக்களின் பெயர் என்ன?

சிற்றூர்களில் வாழும் மக்களுக்கு உழைப்பாளி என்று பெயர்.

2.  உழைப்பாளர் மக்கள் வேலை செய்யும்போது என்ன செய்வர்?

உழைப்பாளர் மக்கள் வேலை செய்யும்போது பாட்டு பாடுவர்.

3.  நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப் பெறுகின்றன?

நாட்டுப்புறப் பாடல்கள் ‘எழுதாக் கிளவி’ என்றும், ‘பாமரர் பாடல்கள்’ என்றும் அழைக்கப் பெறுகின்றன.

4. ‘எழுதாக் கிளவி’ என்றால் என்ன?

ஏட்டில் எழுதப்படாமல் செவிவழி வந்த பாடல்களாக இருப்பதால் இவை எழுதாக் கிளவி எனப்பெறுகின்றன.

5.  தாலாட்டுப் பாடல் யாருக்காகப் பாடப் பெறுகிறது?

தாலாட்டுப் பாடல் குழந்தைக்காகப் பாடப் பெறுகிறது.

6.  பால்பசு எவ்வாறு வாங்கப் பெற்றது?

பால்பசு தாய்வீட்டுச் சீதனமாக வாங்கப் பெற்றது.

7.  பால்பசுவின் வால் என்ன நிறம்?

பால்பசுவின் வால் தங்க நிறம்.

8.  அணைகயிறும், பிடிகயிறும் எதனால் செய்யப் பெற்றவை?

அணைகயிறும், பிடிகயிறும் பொன்னால் செய்யப் பெற்றவை.

9.  பால்பசுவின் கொம்பு எதனால் செய்யப் பெற்றது?

பால்பசுவின் கொம்பு தங்கத்தால் செய்யப் பெற்றது.

10.  பால்பசுவின் கொம்பு, வால் எந்நிறத்தவை?

பால்பசுவின் கொம்பு, வால் தங்க நிறமானவை.