5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பாட அறிமுகம்
Introduction to Lesson


கிராமப்புறங்களில் வாழும் உழைப்பாளி மக்கள் உழைப்பின் அலுப்புத் தெரியாமல் இருக்க, பாடிக்கொண்டே வேலை செய்வது வழக்கம். எனவே, நாட்டுப்புறங்களில் பாடும் பாடல்களே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகின்றன. செவிவழி வந்த இப்பாடல்களை எழுதாக் கிளவி என்றும், பாமர மக்கள் பாடுவதால் பாமரர் பாடல்கள் என்றும் கூறுவர். தாலாட்டுப் பாடல் ஒன்று உங்களுக்குப் பாடப்பகுதியாக அமைந்துள்ளது.