5. இக்கால இலக்கியம்

இன்பம்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  சுரதா எங்குப் பிறந்தார்?

சுரதா திருவாரூர் மாவட்டம் பழையனூரில் பிறந்தார்.

2.  சுரதாவின் பெற்றோர் யாவர்?

சுரதாவின் பெற்றோர் திருவேங்கடம், சண்பகம் அம்மாள் ஆவர்.

3.  சுரதா என்பதன் விரிவு என்ன?

சுரதா என்பதன் விரிவு சுப்புரத்தின தாசன்.

4.  யார் முன்னிலையில் தாம் கற்ற கல்வியைக் கூறுவது இன்பமாகும்?

கற்றோர் முன்னிலையில் தாம் கற்ற கல்வியைக் கூறுவது இன்பமாகும்.

5.  வாழ்வில் எச்செயல்களைச் செய்வது இன்பமாகும்?

வாழ்வில் வெற்றி தரும் செயல்களைச் செய்வது இன்பமாகும்.

6.  எது மனித வாழ்க்கை ஆகும்?

இன்பமும் துன்பமும் கலந்ததே மனித வாழ்க்கை ஆகும்.

7.  சுரதா எவ்வாறு அழைக்கப் பெறுகிறார்?

சுரதா உவமைக் கவிஞர் என்று அழைக்கப் பெறுகிறார்.

8.  பல பரிசுகளை வென்ற சுரதாவின் நூல் எது?

பல பரிசுகளை வென்ற சுரதாவின் நூல் தேன்மழை ஆகும்.

9.  சுரதா நடத்திய இதழ்கள் யாவை?

சுரதா நடத்திய இதழ்கள் இலக்கியம், காவியம் ஆகியவை ஆகும்.

10.  சுரதா எந்த வயதில் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்?

சுரதா 24ஆம் வயதில் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.