5. இக்கால இலக்கியம்

புதுக்கவிதை

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  மரபுக் கவிதை வடிவிலிருந்து மாறுபட்டக் கவிதை வடிவம் எது?

மரபுக் கவிதை வடிவிலிருந்து மாறுபட்டக் கவிதை வடிவம் புதுக்கவிதை.

2.  வல்லிக்கண்ணன் எங்குப் பிறந்தார்?

வல்லிக்கண்ணன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

3.  வல்லிக்கண்ணன் பெற்ற உயர் விருது எது?

வல்லிக்கண்ணன் பெற்ற உயர் விருது சாகித்திய அகாதெமி விருது.

4.  நடந்தே கழிய வேண்டியது எது?

நாம் செல்ல வேண்டிய தொலைவுகள் நடந்தே கழிய வேண்டும்.

5.  கொடுத்தே தீர வேண்டியது எது?

கொடுத்தே தீர வேண்டியது வாங்கியக் கடன்.

6.  அமுதபாரதி எங்கே பிறந்தார்?

அமுதபாரதி திருவள்ளூர் அருகில் உள்ள மாமண்டூரில் பிறந்தார்.

7.  அமுத பாரதி பெற்ற தமிழக விருது யாது?

அமுத பாரதி, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதைப் பெற்றார்.

8.  அமுத பாரதியின் முதல் ‘ஐக்கூ’ நூலின் பெயர் என்ன?

அமுத பாரதியின் முதல் ‘ஐக்கூ’ நூலின் பெயர் புள்ளிப் பூக்கள்.

9.  செய்தே அழிய வேண்டியது எது?

செய்தே அழிய வேண்டியது நாம் செய்யும் வேலை ஆகும்.

10.  காட்டு மூங்கில்களால் உருவாகும் இசைக்கருவியின் பெயர் என்ன?

காட்டு மூங்கில்களால் உருவாகும் இசைக்கருவியின் பெயர் புல்லாங்குழல்.