4. சிற்றிலக்கியம்

அபிராமி அந்தாதி

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தமிழர் சமய மரபில் சிறுதெய்வ வழிபாடும், பெண்தெய்வ வழிபாடும் சிறப்பிற்கு உரியன. பொதுவாக, தாயைத் தெய்வமாக வணங்குதல் தமிழ்த் திராவிடப் பண்பாடாகும். இத்தகைய தாயை ஒரு நொடிப் பொழுதேனும் மனத்தில் நினைந்து வணங்குபவர், பல்வேறு நற்குணங்கள் கொண்டு நல்வாழ்வு வாழ்வர். இவ்வாறு வணங்கி வாழாதவர் எந்நிலை அடைந்து வருந்துவர் என்பதை நம்பாடத்தின் பாடல் விளக்குகின்து.