4. சிற்றிலக்கியம்

கலிங்கத்துப் பரணி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  தக்கயாகப் பரணியை இயற்றியவர் யார்?

தக்கயாகப் பரணியை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.

2.  சிற்றிலக்கியங்களின் வகைமை எத்தனை?

சிற்றிலக்கியங்களின் வகைமை 96 ஆகும்.

3.  முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் யார்?

முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் சயங்கொண்டார்.

4.  தமிழில் முதலில் தோன்றிய பரணி எது?

தமிழில் முதலில் தோன்றிய பரணி கலிங்கத்துப் பரணி.

5.  ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ என்பது எதைக் குறிக்கும்?

‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ என்பது கலிங்கத்துப் பரணியைக் குறிக்கும்.

6.  பரணி என்பது யார்மீது பாடப் பெறும்?

பரணி என்பது ஆயிரம் யானைகளைப் போரில்வென்ற வீரன்மீது பாடப் பெறும்.

7.  சயங்கொண்டார் பிறந்த ஊர் எது?

சயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி என்பதாகும்.

8.  தீபங்குடி எந்த நாட்டில் உள்ளது?

தீபங்குடி சோழ நாட்டில் உள்ளது.

9.  குலோத்துங்க சோழன் பெற்ற சிறப்புப் பெயர்கள் யாவை?

அபயன், உபய குலோத்தமன், இராசேந்திரன், சுங்கந் தவிர்த்த சோழன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தான்.

10.  திருமால், யாராகப் பிறந்தான் என்று புராணம் கூறுகிறது?

திருமால், இராமனாகவும் கண்ணனாகவும் முதற்குலோத்துங்க சோழனாகவும் பிறந்தான் என்று புராணம் கூறுகிறது.