கலிங்கத்துப் பரணி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றியவர் ---------.
தக்கயாகப் பரணி என்ற நூலை இயற்றியவர்ஒட்டக்கூத்தர்
2. சிற்றிலக்கியங்கள் ----------- நூல்களைக் கொண்டது.
சிற்றிலக்கியங்கள் 96 நூல்களைக் கொண்டது..
3. தமிழில் தோன்றிய முதல் பரணி ----------.
தமிழில் தோன்றிய முதல் பரணி கலிங்கத்துப் பரணி.
4. கலிங்கத்துப் பரணி ----------- பாடல்களைக் கொண்டது.
கலிங்கத்துப் பரணி 599 பாடல்களைக் கொண்டது.
5. முதற் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் ---------.
முதற் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் சயங்கொண்டார்
6. பரணி என்பது ------- யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.
பரணி என்பது ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.
7. சயங்கொண்டார் பிறந்த ஊர் -------------.
சயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
8. தீபங்குடி ------------ நாட்டில் உள்ளது.
தீபங்குடி சோழ நாட்டில் உள்ளது.
9. முதற்குலோத்துங்க சோழன் ---------- குலத்தில் தோன்றியவன்.
முதற்குலோத்துங்க சோழன் சாளுக்கிய குலத்தில் தோன்றியவன்.
10. விசயதரன் என்பது ------------ வேறு பெயர்.
விசயதரன் என்பது முதற்குலோத்துங்க சோழனின் வேறு பெயர்.