4. சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

பாட அறிமுகம்
Introduction to Lesson


திருக்குற்றால மலையில் வீற்றிருக்கும் இறைவன் பெயர் திருக்குற்றால நாதர் ஆகிய சிவபெருமான் ஆகும். குற்றாலநாதர் உலா வருகின்றபோது வசந்தவல்லி என்னும் பெண் அவர்மீது காதல் கொள்கிறாள். குறத்தி ஒருத்தி வசந்தவல்லியின் மனத்தில் உள்ள காதலை வெளிப்படுத்திக் குறி கூறுகிறாள். குற்றால நாதராகிய சிவபெருமானின் பெருமைகளைக் கூறும் வகையில் அமைந்துள்ள செய்யுள் நாடகம் திருக்குற்றாலக் குறவஞ்சி. இந்த நூல் (1) கடவுள் வணக்கம், (2) இறைவனின் திருவுலா, (3) வசந்தவல்லியின் காதல், (4) குறவஞ்சி நாடகம், (5) சிங்கனும் சிங்கியும் என்னும் ஐந்து பகுதிகளைக் கொண்டது. உங்களுக்குப் பாடமாக இடம் பெற்றுள்ளப் பாடல் குறவஞ்சி நாடகம் என்னும் 4ஆம் பகுதியுள் நாட்டுவளம் கூறுதல் என்ற பிரிவில் இருந்து எடுக்கப்பெற்றுள்ளது.