அபிராமி அந்தாதி
பாடல்
Poem
தோத்திரம் செய்து தொழுது மின்போலும்
நின் தோற்ற மொரு
மாத்திரைப் போது மனத்தில் வையாதவர்
வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி
நாளும் குடில்கள் தொறும்
பாத்திரங் கொண்டு பலிக்கு
உழலா நிற்பர் பாரெங்குமே.
- அபிராமிப் பட்டர்
