4. சிற்றிலக்கியம்

மூவருலா

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  மூவருலா எப்புலவரால் எழுதப்பட்டது?

அ) ஒட்டக்கூத்தர்

ஆ) கம்பர்

இ) சயங்கொண்டார்

ஈ) புகழேந்தி

அ) ஒட்டக்கூத்தர்

2.  விக்கிரம சோழன் மகன் யார்?

அ) முதல் குலோத்துங்கன்

ஆ) முதல் இராசராசன்

இ) இரண்டாம் இராசராசன்

ஈ) இரண்டாம் குலோத்துங்கன்

ஈ) இரண்டாம் குலோத்துங்கன்

3.  குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் இயற்றியவர் யார்?

அ) கம்பர்

ஆ) ஒட்டக்கூத்தர்

இ) புகழேந்தி

ஈ) கபிலர்

ஆ) ஒட்டக்கூத்தர்

4.  ‘கவி ராட்சதர்’ எனப் போற்றப் பெற்றவர் யார்?

அ) செயங்கொண்டார்

ஆ) பரணர்

இ) கபிலர்

ஈ) ஒட்டக்கூத்தர்

ஈ) ஒட்டக்கூத்தர்

5.  மூன்று உலாக்கள் அடங்கிய நூல் எது?

அ) மூவருலா

ஆ) முத்தொள்ளாயிரம்

இ) ஈட்டி எழுபது

ஈ) தக்கயாகப் பரணி

அ) மூவருலா

6.  ஒட்டக்கூத்தர் எந்த நாட்டவர்?

அ) பாண்டிய நாடு

ஆ) சோழ நாடு

இ) சேர நாடு

ஈ) தொண்டை நாடு

ஆ) சோழ நாடு

7.  தன்மீது பாடிய உலாவில் உள்ள ஒரு கண்ணியை ஒட்டி செய்யுள் இயற்றும்படிக் கேட்ட அரசன் யார்?

அ) விக்கிரம சோழன்

ஆ) இரண்டாம் இராசராசன்

இ) இரண்டாம் குலோத்துங்க சோழன்

ஈ) முதலாம் இராசராசன்

அ) விக்கிரம சோழன்

8.  இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற சிறப்புப் பெயர் யாது?

அ) வில்லவன்

ஆ) அபயன்

இ) கங்கைகொண்டான்

ஈ) முடிகொண்டான்

ஆ) அபயன்

9.  தேர்க்காலில் தன்மகனைக் கொன்றவன் யார்?

அ) மனுநீதிச் சோழன்

ஆ) சிபி

இ) இராசராசன்

ஈ) இராசேந்திரன்

அ) மனுநீதிச் சோழன்

10.  பெண்களின் பருவங்கள் எத்தனை?

அ) பத்து

ஆ) ஏழு

இ) மூன்று

ஈ) ஆறு

ஆ) ஏழு