4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  இரட்டுற மொழிதல் என்பது ----------- ஆகும்.

இரட்டுற மொழிதல் என்பது சிலேடை ஆகும்.

2.  சிலேடை -------- வகைபெறும்.

சிலேடை இரண்டு வகைபெறும்.

3.  கலைசை என்பது ----------- என்னும் ஊராகும்.

கலைசை என்பது தொட்டிக்கலை என்னும் ஊராகும்.

4.  தொட்டிக்கலை என்பது --------- நாட்டில் உள்ளது.

தொட்டிக்கலை என்பது தொண்டை நாட்டில் உள்ளது.

5.  சுப்பிரமணிய முனிவர் ------------- ஆதீனப் புலவராய் இருந்தார்.

சுப்பிரமணிய முனிவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் இருந்தார்.

6.  திருவாவடுதுறையைப் பாடிய நூல் -------------- என்பதாகும்.

திருவாவடுதுறையைப் பாடிய நூல் திருவாவடுதுறைக் கோவை என்பதாகும்.

7.  வண்டினம் ----------- கால்களை உடையன.

வண்டினம் ஆறு கால்களை உடையன.

8.  அரி என்பது --------- எனும் கடவுள்.

அரி என்பது திருமால் எனும் கடவுள்

9.  அரிவை என்பது ----------- ஆகும்.

அரிவை என்பது உமாதேவி ஆகும்

10.  சிவன் உமாதேவியை ------------ பாகத்தில் கொண்டவன்.

சிவன் உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டவன்.