கலிங்கத்துப் பரணி
பயிற்சி - 3
Exercise 3
1. கலிங்கத்துப் பரணி பாடியவர் யார்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) கம்பர்
இ) சயங்கொண்டார்
ஈ) கபிலர்
இ) சயங்கொண்டார்
2. தக்கயாகப் பரணி இயற்றியவர் யார்?
அ) கபிலர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) கம்பர்
ஈ) சயங்கொண்டார்
ஆ) ஒட்டக்கூத்தர்
3. கலிங்கத்துப் பரணி எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
அ) 499
ஆ) 400
இ) 599
ஈ) 600
இ) 599
4. ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ எனக் கூறியவர் யார்?
அ) கபிலர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) சயங்கொண்டார்
ஈ) கம்பர்
ஆ) ஒட்டக்கூத்தர்
5. பரணி என்பது எத்தனை யானைகளைக் கொன்றவனைப் புகழ்ந்து பாடுவது?
அ) பத்தாயிரம்
ஆ) ஐயாயிரம்
இ) ஆயிரம்
ஈ) நூறு
இ) ஆயிரம்
6. சயங்கொண்டார் பிறந்த தீபங்குடி எந்த நாட்டில் உள்ளது?
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு
இ) சேர நாடு
ஈ) தொண்டை நாடு
ஆ) சோழ நாடு
7. முதற்குலோத்துங்க சோழன் எக்குலத்தில் பிறந்தவன்?
அ) சோழர் குலம்
ஆ) சாளுக்கிய குலம்
இ) பல்லவ குலம்
ஈ) சேரர் குலம்
ஆ) சாளுக்கிய குலம்
8. கருணாகரன் எந்த நாட்டை வென்றான்?
அ) வட கலிங்கம்
ஆ) தென் கலிங்கம்
இ) மராட்டியம்
ஈ) சாளுவம்
அ) வட கலிங்கம்
9. எக் கடவுள் முதற் குலோத்துங்க சோழனாகப் பிறந்தான்?
அ) சிவன்
ஆ) பிரம்மா
இ) திருமால்
ஈ) முருகன்
இ) திருமால்
10. முதற்குலோத்துங்க சோழன் யார் மகள் வயிற்றுப் பேரன்?
அ) முதல் இராசராசன்
ஆ) முதல் இராசேந்திரன்
இ) வீரராசேந்திரன்
ஈ) இரண்டாம் இராசராசன்
ஆ) முதல் இராசேந்திரன்