4. சிற்றிலக்கியம்

அபிராமி அந்தாதி

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  அபிராமிப் பட்டரின் இயற்பெயர் -------------.

அபிராமிப் பட்டரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.

2.  அன்னை அபிராமி குடிகொண்ட ஊர் ---------.

அன்னை அபிராமி குடிகொண்ட ஊர் திருக்கடையூர்.

3.  திருக்கடையூர் ------------ மாவட்டத்தில் உள்ளது.

திருக்கடையூர் நாகை மாவட்டத்தில் உள்ளது.

4.  தாயைத் தெய்வமாக வணங்குவது ------------- பண்பாகும்.

தாயைத் தெய்வமாக வணங்குவது தமிழ்த் திராவிடப் பண்பாகும்.

5.  அந்தம் என்ற சொல்லிற்கு --------- என்று பொருள்.

அந்தம் என்ற சொல்லிற்கு முடிவு என்று பொருள்.

6.  ஆதி என்பது ------------ எனப் பொருள் பெறும்.

ஆதி என்பது தொடக்கம் எனப் பொருள் பெறும்.

7.  தோத்திரம் என்பது ---------- எனப் பொருள் பெறும்.

தோத்திரம் என்பது உச்சரித்து எனப் பொருள் பெறும்.

8.  அபிராமி என்பது --------- கடவுளாகும்.

அபிராமி என்பது பெண் கடவுளாகும்.

9.  அபிராமியின் தோற்றம் ----------- போன்றது.

அபிராமியின் தோற்றம் மின்னல் போன்றது

10.  அபிராமியை மனத்தில் நினையாதவர்க்கு வீடுதோறும் ---------- எடுக்கும் நிலைவரும்.

அபிராமியை மனத்தில் நினையாதவர்க்கு வீடுதோறும் பிச்சை எடுக்கும் நிலைவரும்.