அபிராமி அந்தாதி
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. அபிராமி மீது பாடப்பெற்ற நூல் எது?
அபிராமி மீது பாடப்பெற்ற நூல் அபிராமி அந்தாதி.
2. அபிராமி அந்தாதி பாடியவர் யார்?
அபிராமி அந்தாதி பாடியவர் அபிராமிப் பட்டர்.
3. அபிராமிப் பட்டரின் இயற்பெயர் என்ன?
அபிராமிப் பட்டரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.
4. அபிராமி குடிகொண்ட கோவில் எங்குள்ளது?
அபிராமி குடிகொண்ட கோவில் திருக்கடையூரில் உள்ளது.
5. திருக்கடையூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருக்கடையூர் நாகை மாவட்டத்தில் உள்ளது.
6. அன்னை அபிராமி எந்த வகைக் கடவுள்?
அன்னை அபிராமி சிறுதெய்வ பெண் கடவுளாகும்.
7. அந்தாதி என்றால் என்ன?
அந்தாதி என்பது ஒரு பாடலின் முடிவு அடுத்தப் பாடலின் தொடக்கமாக அமைந்து நூறுபாக்களைக் கொண்ட இலக்கிய வகைமையாகும்.
8. மின்னல் போன்ற தோற்றமுடையவள் யார்?
அன்னை அபிராமி மின்னல் போன்ற தோற்றமுடையவள்.
9. பலிக்கு உழல்பவர் யார்?
இமைப் பொழுதேனும் அன்னை அபிராமியை மனத்தால் நினைக்காதவர் பலிக்கு உழல்வர்.
10. பலிக்கு என்பது என்ன?
பலிக்கு என்பது பிச்சை எடுத்து, அலைந்துத் திரியும் நிலையாகும்.