மூவருலா
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. மூவருலாவின் பாட்டுடைத் தலைவர்கள் யாவர்?
மூவருலாவின் பாட்டுடைத் தலைவர்கள் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகியவர்களாவர்.
2. மூவருலாவின் ஆசிரியர் யார்?
மூவருலாவின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர்.
3. கூத்தர் என்பது யாருடைய இயற்பெயர்?
கூத்தர் என்பது ஒட்டக்கூத்தரின் இயற்பெயர்.
4. ஒட்டக்கூத்தர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஒட்டக்கூத்தர் சோழ நாட்டைச் சேர்ந்தவர்.
5. அரிசிலாற்றங்கரையில் ஓர் ஊரைப் பரிசாகப் பெற்றவர் யார்?
அரிசிலாற்றங்கரையில் ஓர் ஊரைப் பரிசாகப் பெற்றவர் ஒட்டக்கூத்தர்.
6. இரண்டாம் குலோத்துங்கனின் தந்தை யார்?
இரண்டாம் குலோத்துங்கனின் தந்தை விக்கிரம சோழன்.
7. இரண்டாம் இராசராசன் யாருடைய மகன்?
இரண்டாம் இராசராசன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன்.
8. தேவர்களையும், அமராவதி நகரையும் பாதுகாத்தவன் யார்?
தேவர்களையும், அமராவதி நகரையும் பாதுகாத்தவன் முசுகுந்த சக்கரவர்த்தி.
9. இரண்டாம் குலோத்துங்கன் பட்டத்தரசியின் பெயர் என்ன?
இரண்டாம் குலோத்துங்கன் பட்டத்தரசியின் பெயர் தியாகவல்லி.
10. இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோவிலுக்கு என்ன செய்தான்?
இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து பொன் வேய்ந்தான்.