4. சிற்றிலக்கியம்

முவருலா

பாடல் கருத்து
Theme of Poem


● ஆரவாரம் மிக்க திருப்பாற்கடலின் பாசடைக்கு நடுவில் ஒரு செங்கமலம் பூத்தது போன்று, பாய்கின்ற குதிரைகளால் பூட்டப் பெற்ற ஒற்றைச் சக்கரத்தை உடைய தேரின்மேல் உலா வருகின்ற சூரியன் (ஆதித்தன்).

● உலக உயிர்கள் எல்லாம் மயங்கும்படியாக, கன்றினை இழந்த பசுவின் துயரம் நீங்கத் தன் ஒரேமகன் வீதிவிடங்கனைத் தேர்க்காலிட்டுத் தேரைச் செலுத்திய மனவலிமை மிக்க நடுவு நிலைமை தவறாத மனுநீதிச் சோழன்.

● தன் அருள் தன்மையினால் வந்து இரந்த தேவர் குறை போக்க பிறவேந்தர் ஏறாத இந்திரனாகிய காளைமேல் ஏறிச்சென்று தானவரை வென்ற இக்குவாகுவின் மகன் காகுத்தன்.

● தனது ஆற்றலால் சோர்வு அடையாமல் அரமகளிரின் காதணிகளைப் பாதுகாத்து (தேவர்களைப் பாதுகாத்து) இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க, அவன் நகரமாகிய அமராவதியைப் பாதுகாத்து, திருச்சக்கரப் படையை உடையவனாகிய முசுகுந்த சக்கரவர்த்தி.