4. சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

பாடல்
Poem


ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக்காண்பது மின்னார் மருங்குல்

வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு

போடக்காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து

தேடக்காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற் றாலர்தென் யொரியநாடே.

- திரிகூடராசப்பக் கவிராயர்