அபிராமி அந்தாதி
பாட அறிமுகம்
Introduction to lesson
அபிராமி என்ற தெய்வத்தின் மீது பாடப்பட்டது அபிராமி அந்தாதி. இதை எழுதியவர் அபிராமிப் பட்டர். இது நூறு பாடல்களைக் கொண்டது. இதில் உள்ள 69ஆம் பாடல் நமக்குப் பாடமாக உள்ளது.
அந்தாதி என்பதை அந்தம் + ஆதி என்று பிரிக்கலாம். அந்தம் = முடிவு. ஆதி = தொடக்கம். ஒரு பாடலின் முடிவு அடுத்தப் பாடலின் தொடக்கமாக அமையும் வகைமைக்கு அந்தாதி என்று பெயர். இதுபோன்று நூறு பாடல்களும் அமையும்.
நூறு பாடல்களையும் மறக்காமல் தொடர்ந்து சொல்ல, நினைவு வைத்துக்கொள்ள அந்தாதிமுறை பயனுடையது.