மூவருலா
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மூவருலா --------- சிற்றிலக்கியங்களில் ஒன்று.
மூவருலா 96 சிற்றிலக்கியங்களில் ஒன்று.
2. மூவருலா நூலின் ஆசிரியர் --------.
மூவருலா நூலின் ஆசிரியர்ஒட்டக்கூத்தர்
3. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் ---------.
ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்
4. அபயன் என்னும் இயற்பெயர் பெற்றவன் ----------.
அபயன் என்னும் இயற்பெயர் பெற்றவன் இரண்டாம் குலோத்துங்க சோழன்.
5. விக்கிரம சோழனின் மகன் -------------.
விக்கிரம சோழனின் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன்
6. ஒட்டக்கூத்தரால் --------- பரணி பாடப்பெற்றது.
ஒட்டக்கூத்தரால் தக்கயாகப் பரணி பாடப்பெற்றது.
7. ஒட்டக்கூத்தர் எழுதிய மற்றொரு நூல் -----------.
ஒட்டக்கூத்தர் எழுதிய மற்றொரு நூல் ஈட்டி எழுபது
ஒட்டக்கூத்தர் எழுதிய மற்றொரு நூல் ஈட்டி எழுபது
8. திருவாரூரில் சைவ நாயன்மார் மூவருக்குச் சிலை வைத்தவன் --------.
திருவாரூரில் சைவ நாயன்மார் மூவருக்குச் சிலை வைத்தவன் இரண்டாம் குலோத்துங்க சோழன்
9. இந்திரனைக் காளையாக ஊர்ந்தவன் -----------.
இந்திரனைக் காளையாக ஊர்ந்தவன் காகுத்தச் சக்கரவர்த்தி
10. கைக்கிளை என்றால் ----------- ஆகும்.
கைக்கிளை என்றால் ஒருதலைக் காமம் ஆகும்.