இரட்டுற மொழிதல்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
இரட்டுற மொழிதல் என்பது இரண்டு + உற + மொழிதல் என்று பொருள் படும். இரு பொருள்படும்படி செய்யுள் அமைக்கப்பெறும். இதனைச் சிலேடை எனவும் கூறுவர். ஒருசொல் ஒருதொடரில் அமைந்து பிரிக்கப்பெறாமல் இருவேறு பொருள் தருவது செம்மொழிச் சிலேடை எனப்பெறும். ஒரு சொல்லேனும் தொடரேனும் பிரிந்து இருவேறு பொருள் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்பெறும்.