4. சிற்றிலக்கியம்

கலிங்கத்துப் பரணி

பாடல் கருத்து
Theme of the Poem


முன்னொரு சமயம் இலங்கையைப் போரிட்டு அழித்த இராமனாகிய அந்தத் திருமாலே, பிறகு கண்ணனாகத் தோன்றிப் பாரதப் போரை முடித்தான். அந்தத் திருமாலே இப்பொழுது பகைவரை வென்று விளங்குகின்ற ஒளி வீசும் ஆணைச் சக்கரத்தை உடைய விசயதரன் என்னும் முதற்குலோத்துங்க சோழனாக இவ்வுலகில் பிறந்தான் என்ற புராணக் கருத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.