திருக்குற்றாலக் குறவஞ்சி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் ----------- கவிராயர்.
குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்.
2. குற்றால நாதர் என்று அழைக்கப்பெறும் இறைவன் -------.
குற்றால நாதர் என்று அழைக்கப்பெறும் இறைவன் சிவபெருமான்
3. தென்காசி ---------- மாவட்டத்தில் உள்ளது.
தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.
4. சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் -------.
சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.
5. வெள்ளம் ----------- த்தன்னோடு அடித்துச் சென்றது.
வெள்ளம் பூக்களை த்தன்னோடு அடித்துச் சென்றது.
6. ஒடுங்குதல் என்பதன் பொருள் -----------.
ஒடுங்குதல் என்பதன் பொருள் தனித்திருத்தல்
7. உலக வாழ்வை விடுத்து அருள் நெறியில் மனத்தை அடக்கி வாழ்பவர் ----------.
உலக வாழ்வை விடுத்து அருள் நெறியில் மனத்தை அடக்கி வாழ்பவர் யோகியர்.
8. பெண்களின் -------- ப்பகுதி வருந்தியது.
பெண்களின் இடை (இடுப்பு) ப்பகுதி வருந்தியது.
9. சூல் என்பதன் பொருள் ---------.
சூல் என்பதன் பொருள் கருவுறுதல்.
10. திரிகூடராசப்பக் கவிராயருக்கு கிடைத்தப் பரிசு நிலத்திற்கு ----------- மேடு என்று பெயர்.
திரிகூடராசப்பக் கவிராயருக்கு கிடைத்தப் பரிசு நிலத்திற்கு குறவஞ்சி மேடு என்று பெயர்.