4. சிற்றிலக்கியம்

திருக்குற்றாலக் குறவஞ்சி

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ளது வடகரை என்னும் பகுதி. இந்தப் பகுதியின் அரசர் சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர் திரிகூடராசப்பக் கவிராயர். குறவஞ்சியைப் பாடியதற்காக ‘மதுரையை ஆண்ட சொக்கலிங்க நாயக்கர்’ குறவஞ்சி மேடு என்ற நிலப்பகுதியைப் பரிசாக அளித்துள்ளார். திருக்குற்றால நாதர் கோயில் வித்துவான் என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கியுள்ளார்.