இரட்டுற மொழிதல்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
இப்பாடலை இயற்றியவர் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர். இவர் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள காட்டுமன்னார்கோவில் என்னும் ஊரில் பிறந்தவர். சைவ சமயப்பற்று உடையவர். இவர் சிலகாலம் திருவாவடுதுறை ஆதீனப் புலவராய் இருந்தவர். இவர், துறைசைக் கோவை, கலைசைக் கோவை, தணிகை விருத்தம், திருவாவடுதுறைக் கோவை, சிவஞானமுனிவர் துதி, கீர்த்தனை முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.