திருக்குற்றாலக் குறவஞ்சி
பயிற்சி - 3
Exercise 3
1. திருக்குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர்
அ) திரிகூடராசப்பக் கவிராயர்
ஆ) அருணாசலக் கவிராயர்
இ) அமிர்தக் கவிராயர்
ஈ) ஆனந்தக் கவிராயர்
அ) திரிகூடராசப்பக் கவிராயர்
2. ‘தென்காசி’ என்ற ஊர் உள்ள மாவட்டம்
அ) மதுரை
ஆ) திருச்சி
இ) திருநெல்வேலி
ஈ) கோவை
இ) திருநெல்வேலி
3. திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடியதற்காகப் பரிசாகப் பெற்ற நிலப்பகுதி
அ) மணல் மேடு
ஆ) காசி மேடு
இ) மண் மேடு
ஈ) குறவஞ்சி மேடு
ஈ) குறவஞ்சி மேடு
4. குற்றாலக் குறவஞ்சி எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) பத்து
அ) ஐந்து
5. “ஓடக்காண்பது. . ..” என்ற பாடல் இடம்பெற்றுள்ள பகுதி எது?
அ) இறைவனின் திருவுலா
ஆ) வசந்த வல்லியின் காதல்
இ) குறவஞ்சி நாடகம்
ஈ) சிங்கனும் சிங்கியும்
இ) குறவஞ்சி நாடகம்
6. ஓடக் காண்பது எது?
அ) மழைநீர் வெள்ளம்
ஆ) குதிரைகள்
இ) ஆற்று வெள்ளம்
ஈ) பூம்புனல் வெள்ளம்
ஈ) பூம்புனல் வெள்ளம்
7. ஒடுங்கக் காண்பது எது?
அ) மகளிர் உள்ளம்
ஆ) தண்டனை பெற்றோர் உள்ளம்
இ) யோகியர் உள்ளம்
ஈ) சான்றோர்களின் உள்ளம்
இ) யோகியர் உள்ளம்
8. வாடக் காண்பது எது?
அ) பெண்களின் முகம்
ஆ) வீரர்களின் உடல்
இ) வீரர்களின் கால்கள்
ஈ) பெண்களின் இடை
(ஈ) பெண்களின் இடை
9. வருந்தக் காண்பது எது?
அ) சூலுற்றச் சங்கு
ஆ) சூற்றை நண்டு
இ) சூலுற்றப் பெண்கள்
ஈ) சூலுற்றத் தவளை
அ) சூலுற்றச் சங்கு
10. புலம்பக் காண்பது எது?
அ) சிலம்பு
ஆ) கிண்கிணி
இ) மேகலை
ஈ) வளையல்
ஆ) கிண்கிணி