4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  கலைசை என்பது எந்த ஊர்?

அ) கலவை

ஆ) தஞ்சை

இ) புதுவை

ஈ) தொட்டிக்கலை

ஈ) தொட்டிக்கலை

2.  கலைசை என்பது எந்த நாட்டில் உள்ளது?

அ) சோழ நாட்டில்

ஆ) பாண்டிய நாட்டில்

இ) சேர நாட்டில்

ஈ) தொண்டை நாட்டில்

ஈ) தொண்டை நாட்டில்

3.  கலைசைச் சிலேடை எழுதியவர் யார்?

அ) சிவஞான முனிவர்

ஆ) சிவப்பிரகாசர்

இ) சுப்பிரமணிய முனிவர்

ஈ) கபிலர்

இ) சுப்பிரமணிய முனிவர்

4.  சுப்பிரமணிய முனிவர் எந்த ஆதீனப் புலவராய் இருந்தார்?

அ) தர்மபுர ஆதீனம்

ஆ) திருப்பனந்தாள் ஆதீனம்

இ) திருவாவடுதுறை ஆதீனம்

ஈ) மதுரை ஆதீனம்

இ) திருவாவடுதுறை ஆதீனம்

5.  பாவலர் என்பதன் பொருள் யாது?

அ) காவலர்

ஆ) மறவர்

இ) புலவர்

ஈ) நாவலர்

இ) புலவர்

6.  கா என்றால் என்ன?

அ) சோலை

ஆ) பாலை

இ) காப்பு

ஈ) காடு

அ) சோலை

7.  வண்டினம் எத்தனைக் கால்களை உடையன?

அ) எட்டு

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) பத்து

இ) ஆறு

8.  அரிவை என்பது யாரைக் குறிக்கிறது?

அ) கலைமகள்

ஆ) திருமகள்

இ) காளி

ஈ) உமாதேவி

ஈ) உமாதேவி

9.  சிவன் எத்தனைக் கோட்டைகளை அழித்தான்?

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) ஏழு

ஈ) ஒன்பது

ஆ) மூன்று

10.  தொட்டிக்கலையில் கோவில் கொண்டுள்ள இறைவன் யார்?

அ) பிரமன்

ஆ) திருமால்

இ) சிவன்

ஈ) அய்யனார்

இ) சிவன்