தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • ஆனைமலை - பாண்டியர் கல்வெட்டு்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  அமைவிடம்: மதுரை, ஆனைமலை , லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலின் கருவறை முன்
  உள்ள சுவற்றில் உள்ள கல்வெட்டு.

  மொழி : தமிழ் (இடை இடையே வட மொழிச் சொற்கள் பயன்பட்டுள்ளன)
  எழுத்து : முந்தைய கால வட்டெழுத்து

  காலம் : 8ஆம் நூற்றாண்டு

  கல்வெட்டுப் பாடம்:

  1. கோமாறஞ்சடையற்கு உ
  2. த்தர மந்த்ரி களக்குடி வை
  3. த்யந்(ர்) மூவேந்த மங்கலப்
  4. பேரரையன் ஆகிய மாறங்
  5. காரி இக்கற்றளி செய்து
  6. நீரற்றளியாதேய் ஸ்வர்க்காரோ
  7. ஹனஞ்செய்த பின்னே அவ
  8. னுக்கு அநுஜநாந உத்தர
  9. மந்த்ரபத மெய்தின வாணாதி
  10. மங்கல விசைய அரையன்
  11. ஆகிய மாறனனெஇ
  12. னன் முகமண்டபஞ்செ
  13. ய்து நீரற்றளித்தான்

  கல்வெட்டுச் செய்தி:

  பாண்டிய மன்னன் கோமாறுஞ் சடைய வர்மனின் காலத்தில் அவனது முக்கிய மந்திரி ஆனை மலையிலுள்ள கோயிலைக் கட்டியுள்ளார். ஆனால் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பாகவே இறந்துவிடுகின்றார். அவர் பெயர் மூவேந்த மங்கலப் பேரரையன் என்கிற மாறங்காரி என்பதாகும். இவர் களக்குடியைச் சேர்ந்த வைத்யந் எனக் குறிப்பிடுப்பெறுகிறார். இவருக்குப் பிறகு அப்பதவியை ஏற்ற அவரது இளைய சகோதரர் வாணாதி மங்கல விசைய அரையன் என்கிற மாறன் எயினன், அதே கோயிலுக்கு முகமண்டபம் செய்ததுடன் கும்பாபிஷேகமும் செய்துள்ளார். கும்பாபிஷேகம் என்பதற்கு நீரற்றளித்தல் என்ற அழகிய தமிழ்ச் சொல் வழங்கப்பெற்றுள்ளது

   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:51:04(இந்திய நேரம்)