தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • குசேர் அல் காதிம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    குசேர் அல் காதிம் எகிப்து நாட்டில் செங்கடற்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு ரோமானியர் காலத்தில் சிறந்து விளங்கிய துறைமுகமாகும். இது சங்ககாலத் தமிழகத் துறைமுகங்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தது. இது கிரேக்க குறிப்புகளில் வரும் “மியோஸ் ஹார்மோஸ்” என்ற இடமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. சிகாகோ பல்கலைக்கழகக் கீழ்த்திசை நிறுவனம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஸவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு அகழாய்வு செய்துள்ளன.

    அமைவிடம்

    இது எகிப்திலுள்ள குசேர் நகரத்திற்கு 8 கி.மீ வடக்கே உள்ளது. இங்கு ஓயிட் கோம்ப், ஜானட் ஜான்ஸன், டேவிட் பீகாக், லூசி புளு ஆகியோர் அகழாய்வு செய்துள்ளனர்.

    தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புகள்

    தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு (சாதன்)

    பழங்காலத்தில் பெரிய துறைமுகமாக விளங்கிய இந்தப் பட்டினத்திற்கு இந்தியாவிலிருந்து கப்பல்கள் வணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்றன. அங்கிருந்து பொருள்கள் இந்தியாவிற்கு வந்தன. இங்கு தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள இரு பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை பொ.ஆ. முதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். இவற்றில் “கணன்”, “சாதன்” (படம் 1) என்ற எழுத்துப்பொறிப்புகள் உள்ளன. இவை கண்ணன், சாத்தன் என்ற பெயர்களை உடைய வணிகர்களைக் குறிப்பிடுகின்றன. 2007 ஆம் ஆண்டு “பனை ஓறி” என்ற எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது

    தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு (பனை ஓறி)

    மேலும், இங்கு பழங்கால மிளகும் கிடைத்துள்ளது. எகிப்து வறட்சியான பகுதி என்பதால் உயிர்மப் பொருட்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைக்கின்றன. இங்கு ரூலட்டட் தட்டுகளின் ஓடுகளும் கிடைத்துள்ளன. இந்த ரூலட்டப் எனப்படும் உட்புறம் வேலைப்பாடு அமைந்த தட்டுகள் இந்தியாவில் செய்யப்பட்டவை.

    மேற்கோள் நூல்

    Whitcom Tanet H P. 49 Johnson 1981. Quseiral Qadhim 1980. A preliminaly Report. VSA.

    Mahadevan, I, 2003. Early Tamil Epigraphy from the Ealiest times to the Six Century AD. Cre A.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:10:04(இந்திய நேரம்)