தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அரப்பா ஒரு சிந்து வெளி நாகரிக நகரம்

  • சிவப்பு
    (இரசட் கலவை) வண்ணம் பூசப்பெற்ற,
    ஓவியம் தீட்டப்பெற்ற பானை வகை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    சிவப்பு வண்ணம் (இரசட் கலவை) பூசப்பெற்ற ஓவியம் தீட்டப்பெற்ற பானை வகை (Russet coasted and painted ware) வரலாற்றுத் துவக்ககாலத்தில் (சுமார் பொ.ஆ.மு 400 முதல் பொ.ஆ. 400 வரை) பயன்படுத்தப்பட்டது. இப் பானை வகையின் மீது வெள்ளை நிறத்தில் ஓவியங்கள் தீட்டப்பெற்று, அந்த ஓவியங்களின் மீது சிவப்புக் (இரசட்) கலவை பூசப்பெற்றுக்காணப்படும். இக்கலவை செம்மண் கொண்டு உருவாக்கப்படுகின்றது.

    இரசட்கலவை பூசப்பெற்ற ஓவியம் தீட்டப்பெற்ற பானை

    பிறபெயர்கள் :

    சிவப்பு (இரசட் கலவை) வண்ணம் பூசப்பெற்ற, ஓவியம் தீட்டப்பெற்ற பானை வகை ஆந்திரப் பானை வகை என்றும் அழைக்கப்படுகின்றது.

    வகைகள் :

    இப்பானை வகைகளில் சில உட்புறம் கருப்பாகவும், வெளிப்புறம் சிவப்பாகவும் (கருப்பு-சிவப்பு பானை வகை) காணப்படுகின்றன, சில சிவப்பு நிறத்திலும் (சிவப்பு வகை) உள்ளன.

    காலம் :

    இது வரலாற்றுத் துவக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டது. இது பொ.ஆ.மு (கிமு) 300 லிருந்து பொ.ஆ.மு 300 வரை பயன்பாட்டில் இருந்தது.

    காணப்படும் இடங்கள் :

    இப்பானை வகை பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் காணப்படுகின்றது. குறிப்பாகத் தமிழகத்தின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் இது பரவலாகக் காணப்படுகின்றது. கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் இப்பானை வகை அதிகமாகக் கிடைக்கின்றது. கொடுமணல், உறையூர் உள்ளிட்ட பல இடங்களில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:46:44(இந்திய நேரம்)