தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • மேற்கு க்ஷத்ரபர் காசுகள்

    (சக பஹ்லவர்கள, இந்தோ சைத்தியர்கள்)

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    மத்திய மற்றும் வட, தென்ஆசியாவிலிருந்து குடிப்பெயர்ந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் (ஷோக்டியானா, பாக்டிரியா, அரகோஷியா, காந்தாரா, காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜன்தான், உத்திர பிரதேசம், பீகார் போன்ற) குடியேறி பொ.ஆ2ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த வம்சத்தினர். இவர்களது அரசு கிழக்கில் உஜ்ஜயின் , மேற்கில் பளட்டினே, தெற்கில் பாரிகாஸா போன்ற பகுதிகளை உள்ளடக்கியப் பகுதியாகும். இந்தோ சைத்தியா என்றழைக்கப்பெற்றுள்ளது. இவ்வம்சத்தினர் மேற்கு க்ஷத்ரபர்கள், சக பஹ்லவர்கள், இந்தோ சைத்தியர்கள் என்று பலவாறாக அழைக்கப்பெறுகின்றனர்.

    பின்னர் மஹாராஷ்டிரப் பகுதிவரை இவர்கள்அரசு விரிவடைந்திருந்தது. முதல் சக மன்னன் மோகா என்கிற மாவோஸ் ஆவார். இதில் இம்வம்சத்தின் கடைசி அரசர் பொ.ஆ.395இல் ஆட்சி நடத்திய மூன்றாம் ருத்திரசிம்மனாவார்.

    சக பஹலவர்கள் இந்தோ கிரேக்கர்களின் காசுகளை அப்படியே பின்பற்றினர். இவர்களது காசுகள் 2 - 2.5 கிராம் எடைகள் கொண்டன. கிரேக்க காசுகளின் பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் இவர்கள் தங்களுக்கெனச் சில சிறப்பு அம்சங்களை காசுகளில் பின்பற்றியுள்ளனர். சஸ்தானா, ருத்ரதாமன் போன்றோர் இவ்வம்சத்தின் குறிப்பிடத்தக்க அரசரர்களாவர்.

    சின்னங்கள்

    இவர்களது காசுகளில் முன்புறம் கிரேக்க எழுத்தில் தவறுகளுடன் அரசனது பெயர் பொறிக்கப்பெற்றுள்ளது. (corrupted Greek script) எவ்வாறெனினும் எல்லாக் காசுகளிலும் சைத்யத்தைச் சுற்றி அரசர்களது பெயர்கள் இடம்பெறுகின்றன. இதன் பிராகிருத மொழிப்பெயர்ப்பு “ராஜ்ஞ க்ஷத்ரபா சஷ்தானா’; ‘ராஜ்ஞ மஹாக்ஷத்ரபா ஸ்வாமி ருத்ரதமபுத்ரஸ ராஜ்ஞ மஹாக்ஷத்ரபா ஸ்வாமி ருத்ரசேனஸ’ இது போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன.

    சஸ்தானா காசுகள்

    சஸ்தானா காசுகள் எல்லாவற்றிலும் முன்புறம் வித்தியாசமான கண்கள், மூக்கு, முடி அமைப்புடன், தொப்பி அணிந்த அரச உருவமும் பின்புறம் மூன்று வளை முகடும் இடம்பெறுகின்றன. வீரதாமன் உருவங்களில் முன் தலையிலிருந்து நேராக மூக்கு இடம் பெறும்.கிரேக்க பாணியிலுள்ளது. அவர் அண்ணன் தமஜதஸ்ரீ காசகளில் மூக்கு வளைந்துள்ளது.

    உலோகம்

    இவர்கள் வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர்

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:08:16(இந்திய நேரம்)