தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • மதுரை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    தென்னிந்தியாவின் மிகச் சிறப்பான கோவில் நகரமாகத் திகழ்வது மதுரை மாநகரமாகும். இது சங்ககாலப் பாண்டியர்களின் தலைநகரமாகும். அதன் பின்னர் இடைக்காலப் பாண்டியர் மதுரை நாயக்கர்கள், சுல்தான் ஆகியோரின் தலைநகரமாகவும் விளங்கியது. தென் தமிழகத்தின் மிகப்பெரிய நகராகும் மதுரை. மதுரை மீனாட்சியம்மன் கோவில் உலகளவில் புகழ்பெற்றதாகும்.

    அமைவிடம்

    இது சென்னைக்குத் தென்மேற்கே 498 கி.மீ தொலைவில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது மருதை, மதிரை என்றும், ஆலவாய் எனவும் அழைக்கப் பெறுகின்றது.

    சிறப்பு

    சங்ககால மதுரை நகரைப் பற்றி மதுரைக்காஞ்சி விரிவாகக் கூறுகின்றது. சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என இலக்கியங்களுடன் மிகவும் தொடர்புடையது மதுரை. மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ் இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. இங்கிருந்து பாண்டிய மன்னர்களும், சமணசமயத்தவர்களும் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

    மதுரை மாநகரின் மையமாகத் திகழ்வது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். பாண்டியர்களால் கட்டப்பட்ட ஆலயம், 14 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் இடைவெளியில் பல மாறுதல்களையும், புதிய கட்டடங்களின் சேர்க்கையையும் கண்டது. 12 கோபுரங்களைக் கொண்ட இக்கோயில் மீனாட்சி மற்றும் சுந்தரேசருக்கான தனித்தனி சன்னதிகளைக் கொண்டுள்ளது. இங்கு அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்க மண்டபம், கம்பத்தடி மண்டபம், கல்யாண மண்டபம் மற்றும் புது மண்டபம் போன்ற மண்டபங்கள் உள்ளன. மேற்குப் பகுதியில் பொற்றாமரைக்குளம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது.

    நாயக்கர் காலத்தில் மதுரை சிறந்த நகரமாக விளங்கியது. மதுரை மாநகரில் திருமலை நாயக்க மன்னர் கட்டிய அரண்மனை மகாலில் “ஸ்வர்க விலாசம்” என்ற மண்டபமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. இங்கு ஒரு காட்சியகம் உள்ளது.

    மதுரையில் காந்தி அருங்காட்சியகம், தமிழ்ச்சங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. மதுரை சங்ககாலத்திலேயே ஒரு மாநகரமாகத் திகழ்ந்தது. மதுரையைச் சுற்றி யானைமலை, அமணமலை, திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி எனப் பல இடங்களில் தமிழ் பிராமி எழுத்தில் அமைந்த பழந்தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. கோவலன் பொட்டல் பழங்கால நத்தம் உட்பட பல இடங்களில் பெருங்கற்கால ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:01:09(இந்திய நேரம்)