தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • கீழைப்பழங்கற்காலம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    கீழைப்பழங்கற்காலம் ஆங்கிலத்தில் Lower Palaeolithic Period என்று அழைக்கப் படுகின்றது. இக்காலத்தில் மக்கள் கைக்கோடரி, வெட்டும் கருவி (கிளீவர்) ஆகியவற்றைப் பயன்படுத்தினர். மனிதர்கள் பரிணாம (படிநிலை) வளர்ச்சியடைந்த காலத்தின் முதற்கற்கருவிகள் இக்காலத்தில் தான் செய்யப்பட்டன.

    காலம்

    அண்மைக்கால ஆய்வுகளின்படி, இக்காலம் 16 லட்சத்திலிருந்து 1 லட்சம் வருடங்கள் வரை நிலவியது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    வாழ்க்கை முறை

    இக்கால மக்கள் விலங்குகளைக் கற்கருவிகளைக் கொண்டு வேட்டையாடியும், தாவர உணவுகளைச் (கிழங்கு, கீரை, பழம் முதலியன) சேகரித்தும் வாழ்ந்து வந்தனர்.

    மனித மூதாதையர் இனம்

    ஹோமோ ஏரக்டஸ் என்ற மனித மூதாதையர் இனம் இக்காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், பின்னர் இந்தியா உட்பட பல இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றதாகவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

    சான்றுகள் கிடைக்கும் இடங்கள்

    கீழைப் பழங்கற்காலச் சான்றுகள் தமிழகத்தில் பல்லாவரம், அத்திரம்பாக்கம், மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள பல இடங்களில் காணப்படுகின்றன. தருமபுரிப் பகுதியில் வரட்டனபள்ளி, கப்பலவாடி ஆகிய இடங்களிலும் இக்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.

    மேற்கோள் நூல்

    Ramachandran,K.S. 1980, Archaeology of Tamil Nadu, New Delhi.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:59:50(இந்திய நேரம்)