தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுக்கோட்டை தொண்டைமானின் காசுகள்

 • புதுக்கோட்டை தொண்டைமானின் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  புதுக்கோட்டை தொண்டைமான்கள் (18 ஆம் நூற்றாண்டு):

  பிரகதாம்பாள்
  விஜய

  புதுக்கோட்டை தொண்டைமான் வம்சம் கிழவன் சேதுபதியால் 1711இல் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் வெளியிட்ட காசுகளே புதுக்கோட்டை தொண்டைமான் காசுகள் ஆகும். அவர்களுள் சிறந்த விளங்கிய ஸ்ரீவிஜய ரகுநாதனின் செப்புக் காசுகள் கிடைத்துள்ளன. காசின் முன்புறம் “விஜய” என்று தெலுங்கு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறம் பிரகன்நாயகி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது அம்மன் காசு என்று அழைக்கப்படுகிறது. (பொ.ஆ. 1738 ஆம் ஆண்டு வாக்கில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட இக்காசுகள் புதுக்கோட்டையில் 1948 ஆம் ஆண்டு வரை வழக்கிலிருந்துள்ளது). அம்மன் காசு பற்றிய முதல் குறிப்பு 1869 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை தர்பார் பதிவேடுகளில் உள்ளது. தொடக்கத்தில் இந்த அம்மன் காசு உள்ளூர் கைவினைஞர்களால் கையால் வெட்டித் தயாரிக்கப்பட்டும் பின்னர் இயந்திரம் கொண்டு தயார் செய்யப்பட்டது. இதன் மதிப்பு காலணாவிற்கு 5 பைசா ஆகும். தேவைப்பட்ட போதெல்லாம் இக்காசுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:44:35(இந்திய நேரம்)