தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • பெரனிகே

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    பெரனிகே எகிப்து நாட்டில், செங்கடற்பகுதியிலுள்ள ரோமானியத் துறைமுகமாகும். இது சங்ககாலத் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த ஓர் ஊராகும். தமிழ் வணிகர்கள் இப்பகுதிக்குச் சென்றிருந்தனர் என்று கருதப்படுகின்றது.

    அமைவிடம்

    இது எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சுமார் 800 கி.மீ தென் கிழக்கே அமைந்துள்ளது

    சிறப்பு

    பழந்தமிழகத்திற்கு ரோமானியப் பேரரசிலிருந்து வந்த வணிகர்கள் இத்துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாகப் பயணித்து முசிறியை வந்தடைந்தனர். இங்கு பல கட்டடங்கள் மற்றும் கிரேக்க, லத்தின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த ரூலட்டட் தட்டின் ஓடுகள் கிடைக்கின்றன.

    ஒரு சாடியில் 7 ½ கிலோ மிளகு புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது

    இது பழந்தமிழகத்தின் கேரளப் பகுதியிலிருந்து சென்றிருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.

    தேங்காயின் ஓடும், தேக்கு மரத்துண்டுகளும் இங்கு கிடைத்துள்ளன. இவையும் பழந்தமிழகத்திலிருந்து சென்றிருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது.

    தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்பு

    ஒரு பானையோட்டில் “கொ(ற்)ற பூ மான்” (படம் 1 இ) என்ற தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்பு காணப்படுகின்றது. இது மதுவை சேமித்து எடுத்துச் செல்லப் பயன்படும் ஆம்போரா சாடியின் பகுதி போன்று உள்ளது. இங்கு இந்தியப் பானை ஓடுகளும் கிடைக்கின்றன

    இந்த இடத்தை ஸ்டிவன் சைடுபோத்தம் என்ற அறிஞர் பல ஆண்டுகள் ஆய்வு செய்து வருகிறார்.

    மேற்கோள் நூல்

    SideBotham, S.E. 2011. Berenike and the Ancient Masitime Spice Route University of California Press.

    Mahadevam, I 2003. Early Tamil Brahmi Epigraphy. Cre A, Chennai.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:12:02(இந்திய நேரம்)