தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • சுவாமிமலை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகச் சுவாமிமலை கருதப்படுகிறது. மேலும் இவ்வூர் மரபு வழிச் செப்புப் படிமங்கள் செய்யும் தொழில் மையமாக விளங்குகிறது.

    அமைவிடம்

    கும்பகோணத்திற்கு மேற்கே எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது காவிரி ஆற்றின் கரையில் அமைந்த வளமான ஊராகும்.

    இக்கோயில் மாடக்கோயில் போல ஒரு மண்மலை மீதுள்ளது. தந்தையான சிவபெருமானுக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்திற்குப் பொருள் கூறிய தெய்வமாகக் கருதப்படும் முருகன் குடி கொண்டுள்ள தலம் என்பது நம்பிக்கை. கருவறையிலுள்ள முருகனின் வாகனமாக, மயிலுக்குப் பதில் யானை இடம்பெற்றுள்ளது. ஆறுபடைவீடுகளுள் ஒன்றாகும் இது.

    வெண்கலத்தால் செய்யப்பட்ட சிற்பங்களுக்குப் (படிமம்) பெயர் பெற்ற இடமான சுவாமி மலையில், இன்றளவும் மரபு மீறாமல் வெண்கலப் படிமங்கள் வழங்கப்பெறுகின்றன. இவை உலகப் புகழ்பெற்றவையாகும்.

    இங்கு கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு உள்ளது. பொ.ஆ. 1541இல் கிருஷ்ணதேவராயர் இக்கோயிலுக்கு வந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இரா.நாகசாமி கூறுகின்றார்.

    சுவாமிமலை பராந்தக நாட்டில் இருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பிற்காலத்தில், இது திருச்சிராப்பள்ளி உசாவடியில் இருந்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:05:07(இந்திய நேரம்)